பருத்தித்துறை துறைமுக பகுதியில் அபாய நிலையில் காணப்பட்ட மின்கம்பம் அகற்றம்
பருத்தித்துறை துறைமுக பகுதியில் எந்த நேரமும் முறிந்து விழும் அபாய நிலையில் காணப்பட்ட மின்கம்பம் இன்றைய தினம் (13.1.2026) அகற்றப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போலின் தலையீட்டில் இலங்கை மின்சார சபையினரால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பருத்தித்துறை துறைமுக பகுதிக்கு அதிகளவானோர் தினமும் மாலை வேளையில் வந்து செல்கின்ற பொழுதுபோக்கிடமாக காணப்படுவதுடன் கடற்கரை வீதியூடாக அதிகளவான மக்கள் பயணித்து வரும் நிலையில் எந்த நேரமும் முறிந்து விழும் அபாய நிலையில் மின்கம்பம் ஒன்று சிதைவுக்குள்ளாகி காணப்பட்டு வந்தது.
அகற்ற நடவடிக்கை
இது தொர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இலங்கை மின்சார சபைக்கு தெரியப்படுத்தி அதனை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பருத்தித்துறை நகரபிதாவினால் தெரியப்படுத்தப்பட்டது.

இதையடுத்து இன்று காலை இலங்கை மின்சார சபையின் ஊழியர்களினால் மேற்படி மின்கம்பம் பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டுள்ளது.
மேற்படி விடயம் தொடர்பில் ஊடகங்களில் செய்தியாக்கப்பட்ட நிலையில் விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.