முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ளவுள்ள பாப்பரசர் லியோ
பாப்பரசர் பதினான்காம் லியோ, தனது முதல் வெளிநாட்டு பயணமாக லெபனான் நாட்டுக்குச் செல்ல உளளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான இவர், கடந்த மே மாதம் முதல் பதவிவகித்து வருகின்றார்.
தனக்கு முன்பு பதவி வகித்த மறைந்த பாப்பரசர் பிரான்சிஸை போலவே இவரும், போர்நிறுத்தங்களையும், உலக அமைதியையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்.
மத்திய கிழக்கில் நிலவும் வன்முறைகளை
இந்நிலையில், வரலாற்றில் அமெரிக்காவைச் சேர்ந்த முதல் பாப்பரசர் பதினான்காம் லியோ தனது முதல் வெளிநாட்டு பயணமாக, லெபனான் நாட்டுக்குச் செல்வார் என அந்நாட்டைச் சேர்ந்த கர்தினால் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, மறைந்த பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட், கடந்த 2012 ஆம் ஆண்டின் செப்டெம்பரில் தனது கடைசி வெளிநாட்டு பயணமாக லெபனான் நாட்டுக்குச் சென்றார்.
அவருக்கு பிறகு பதவிக்கு வந்த மறைந்த பாப்பரசர் பிரான்சிஸ் அந்நாட்டுக்குச் செல்ல தொடர்ந்து முயற்சித்து வந்தபோதிலும், அங்கு நிலவும் அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழ்நிலைகளால் அது நிறைவேறாமல் போனது.
இதையடுத்து, காஸா மீதான இஸ்ரேலின் போர் உட்பட மத்திய கிழக்கில் நிலவும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு மத்தியஸ்தம் செய்ய தயார் என பாப்பரசர் பதினான்காம் லியோ அறிவித்திருந்தார்.
இவர் லெபனான் நாட்டுக்குச் சென்றால், நீண்டகாலமாக அந்நாட்டின் ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்களுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் நடைபெற்று வரும் மோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்படும் என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan
