போப் பிரான்சிஸின் உடல்நலம் தொடர்பில் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ள தகவல்
திருத்தந்தை போப் பிரான்சிஸ்(Pope Francis) , உரோம் ஜெமெல்லி மருத்துவமனையில் சுய நினைவுடன் இருக்கின்றார் என்று திருப்பீடச்செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.
மேலும், உடல்நிலை மோசமாக இருந்தாலும், மூச்சுத்திணறல் பிரச்சினை எதுவும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஞாயிறு திருப்பலி
ஒவ்வொரு நாளும் திருத்தந்தையின் உடல் நிலை குறித்து அறிக்கை வெளியிட்டு வரும் திருப்பீடச்செய்தித் தொடர்பகமானது,
''பெப்ரவரி 23, ஞாயிற்றுக்கிழமையன்று வெளியிட்ட செய்தியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சுய நினைவுடன் இருப்பதாகவும், ஒக்சிஜன் வழங்கப்பட்டு வருகின்றது.
இரத்தப் பரிசோதனை முடிவுகள் சிறுநீரக செயலிழப்பின் ஆரம்பத்தை வெளிப்படுத்துவதாக இருந்தாலும், தற்போது அவைக் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.
திருத்தந்தை பிரான்சிஸ் தன்னைப் பராமரிப்பவர்களுடன் இணைந்து மருத்துவமனையில் தாங்கி இருக்கும் அறையில் ஞாயிறு திருப்பலியில் பங்கெடுத்துக் கொண்டார்.
திருத்தந்தையின் உடல்நலம்
உரோம் மட்டுமல்லாது உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மறைமாவட்டங்களிலும் திருத்தந்தையின் உடல்நலத்திற்காக பல்வேறு செபவழிபாட்டினை மக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இத்தாலியைச் சார்ந்த பல்வேறு பள்ளிக் குழந்தைகள் ஓவியங்கள் பல வரைந்து திருத்தந்தைக்கு அனுப்பி வைத்து, அவர் உடல்நலம் பெற தங்களது செபத்துடன் கூடிய வாழ்த்தை எடுத்துரைத்து வருகின்றனர்.
திருத்தந்தை பிரான்சிஸ் விரைவில் உடல்நலம் பெற்று வத்திக்கான் திரும்ப அவர்களுக்காக ஒன்றிணைந்து செபிப்போம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

தென்னிந்திய சினிமாவில் அதிகம் வசூல் செய்த 15 திரைப்படங்கள்.. அதில் தமிழ் படங்கள் எத்தனை தெரியுமா? லிஸ்ட் இதோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
