பிரபாகரன் பற்றிய தகவல்களை வெளியுலகிற்கு தெரியப்படுத்திய பாண்டி பஜார் துப்பாக்கிச்சூடு!
பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு (19-05-1982) நிகழ்விற்கு பின்னரே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு , மற்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பற்றிய தகவல்கள் வெளியுலகிற்கு தெரிய வந்ததாக கூறப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருடைய முதல் புகைப்படம் குறித்த துப்பாக்கிச்சூட்டின் பின்னரே, அதாவது 1982 ஆம் ஆண்டுதான் இலங்கைக்குக் கிடைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
1982 மே 19 அன்று பிரபாகரனும் அவரது சகாக்களான இராகவனும், சிவக்குமாரும் பாண்டி பஜாரில் உள்ள தமிழ் ஈழ மக்கள் விடுதலை அமைப்பைச் சேர்ந்த உமா மகேஸ்வரன் என்ற முகுந்தன் மற்றும் ஜோதீஸ்வரன் ஆகியோரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சம்பவமே பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு என கூறப்படுகிறது.
அவரது நீண்டகால தோழராக இருந்து பின்னர் போட்டியாளராக உமா மகேஸ்வரன் மாறியுள்மையை தமிழீழ போராட்டத்தின் வரலாறுகள் கூறுகின்றன.
பட்டப்பகலில் சென்னையிலுள்ள பாண்டி பஜாரின் பரபரப்பான பக்கவாட்டுத் தெருவில் உமா மகேஸ்வரன் பிரபாகரனால் இலக்கு வைக்கப்பட்டமை தமிழீழ போராட்ட வரலாற்றில் முக்கிய நகர்வுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அவ்வாறென்றால் நீண்டகால தோழராக இருந்த உமா மகேஸ்வரன் ஏன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவருக்கு எதிரானவரானார்?
அந்த எதிர் நகர்வுகள் துப்பாக்கிச் சூடுவரை செல்ல காரணம் என்ன?
இவ்வாறான விடயங்களை விரிவாக ஆராய்கிறது கீழுள்ள காணொளி...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |