யாழில் இடம்பெற்ற பொன் சிவகுமாரனின் 51ஆவது நினைவுதினம்
தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த முதல் தியாகி பொன் சிவகுமாரனின் 51வது நினைவுதினம் நேற்று(05) இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
உருவச் சிலைக்கு மலர் மாலை
யாழ். உரும்பிராய் சந்திப் பகுதியில் அமைந்துள்ள பொன் சிவகுமாரனின் நினைவு தூபியில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது சுடர் ஏற்றப்பட்டு, பொன் சிவகுமாரனின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இன்றைய நினைவுதினத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொன் சிவகுமாரனின் சகோதரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 4 மணி நேரம் முன்
ஒரே ட்யூனில் உருவான 2 பாடல்கள்.. இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட்! மேஜிக் செய்த இசையமைப்பாளர் இளையராஜா.. Cineulagam
'சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது'.. நடிகை சைத்ரா அச்சரின் கிளாமர் புகைப்படங்கள் Cineulagam