மக்களுக்கு சேவை வழங்கவே ஒன்று திரண்டுள்ளோம்.. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு
அரசியலில் எதிர் நிலைப்பாட்டை கொண்டுள்ள நாங்கள் கொள்கை ரீதியாக எதிர்ப்பாக உள்ள நாங்கள் மக்களுக்கு சேவை வழங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஒரு அணியின் கீழ் ஒன்று சேர்ந்துள்ளோம் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மன்னார் நகர சபை தவிசாளர் டானியல் வசந்தன் தெரிவித்தார்.
மன்னார் நகர சபையின் 3ஆவது சபைக்கான உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு (4) காலை 10 மணியளவில் மன்னார் நகர சபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது மன்னார் நகர சபை தவிசாளர் உரையாற்றுகையில்,
மக்களுக்கு சேவையை வழங்குவதற்காக நாங்கள் அரசியலில் ஈடுபடுகின்றோம். மக்களுக்கான சேவைகள் அனைவருக்கும் சம அளவில் சென்றடைய வேண்டும். உரிமைகள் அனைவருக்கும் கிடைக்க பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் நாங்கள் கடமையாற்றி வருகின்றோம்.
அந்த கடமையை நாங்கள் அனைவரும் உணர்ந்தவர்களாக எமது செயல்பாடுகள் அமைய வேண்டும்.சிலர் கடமைகளில் இருந்து விலகி செல்கிறார்கள்.நாங்கள் அரசியலுக்கு வந்த நோக்கம் மக்களுக்கான அதிகாரங்களையும் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
மக்களுக்கான சேவைகள் அனைத்தும் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக நாங்கள் அரசியலுக்கு வந்துள்ளோம். -மன்னார் நகர சபை யை பார்ப்போமானால் மூன்று கட்சிகள் இணைந்து இச்சபை யை உருவாக்கி உள்ளது.
எதிரும் புதிருமாக அரசியலில் உள்ள கட்சிகள் இணைந்து இச்சபை யை உருவாக்கி உள்ளது. இக்கட்சிகள் ஒன்றாக இணைந்து இச் சபையை அமைத்துள்ளோம்.அரசியலில் எதிர் நிலைப்பாட்டை கொண்டுள்ள நாங்கள் கொள்கை ரீதியாக எதிர்ப்பாக உள்ள நாங்கள் மக்களுக்கு சேவை வழங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஒரு அணியின் கீழ் ஒன்று சேர்ந்துள்ளோம்.
பலர் பல்வேறு வகையில் கதைப்பார்கள்.வெளியில் பலர் என் மீது பல்வேறு விமர்சனங்களை வைப்பார்கள்.அந்த நேரத்தில் நாங்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்பதை அவர்களுக்கு நாங்கள் காட்டியாக வேண்டும்.







