சரியான ஜனாதிபதி இருந்தும் கூட மீண்டும் மோசடி! கெமுனு விஜேரத்ன குற்றச்சாட்டு
நாட்டிற்கு சரியான ஜனாதிபதி இருந்தும் கூட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் ஏனைய அரசியல்வாதிகள் மீண்டும் மோசடியில் ஈடுபட ஆரம்பித்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கங்களில் நடந்தது போன்றே ஊழல் மோசடிகள் இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகங்களிடம் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த சில காலமாக தற்காலிக அதிவேக பாதை அனுமதிப்பத்திரங்களை பேருந்துகளுக்கு வழங்குவதில் பல அரசியல்வாதிகள் ஈடுபட்டுள்ளனர்.
அரசாங்கத்திற்கு நட்டம்

இதன்படி கிட்டத்தட்ட 35 அதிவேக பாதை அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த தற்காலிக அதிவேக நெடுஞ்சாலை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுவதால், அரசாங்கத்திற்கு 3000 மில்லியன் ரூபா நட்டமேற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்காலிக அதிவேக நெடுஞ்சாலை அனுமதிப்பத்திரங்களுடன் தற்போது 100
பேருந்துகள் இயக்கப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
ராஜினாமா செய்த ஜெயசூரியா: இந்தியாவிற்கு உலகக்கிண்ணத்தைப் பெற்று தந்தவரை நியமித்த இலங்கை News Lankasri