இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக சமூகம் விழிப்படைய வேண்டிய தேவை இருக்கின்றது : நஸீர் அஹமட்(Photos)

Batticaloa Eravur Muslium Lands Nazeer Ahamed
By Rusath Dec 19, 2021 11:44 AM GMT
Report

தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக சமூகம் விழிப்படைய வேண்டிய தேவை இருக்கின்றது எனக் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி இணைப்புக் குழுவின் தலைவருமான நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

கிராமியப் பாலங்களை அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஏறாவூரில் 02 பாலங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டுத் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று ஏறாவூர் நகரில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய அவர்,

ஏறாவூரின் பிரதேச எல்லை விஸ்தரிக்கப்படவேண்டிய தேவை இருக்கிறது. ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவில் 32 கிராமங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் 31 வருடங்களாக விரட்டியடிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள்.

இவ்வளவு காலங்களும் அவர்கள் அங்கு வசித்திருந்தால் அந்தக் கிராமங்கள் நகரங்களாக மாறியிருக்கும். அவ்வாறு எங்களுடைய உரிமைகளைப் பறித்து விட்டு எங்களை வாய்மூடி மௌனியாக இருக்கச் சொல்லுகின்ற விடயம் எவ்வாறு நியாயமாகும்.

ஒரு இனத்தின் உரிமையைக் கேட்பது இனவாதமல்ல அது கடமை. இன்னுமொரு இனத்திற்கு நியாயமாகக் கிடைக்கக் கூடிய உரிமைகளை மறுப்பதும் தடுப்பதுதான் இனவாதம். வடக்கிலே இருந்து எல்ரீரீஈ இனரால் முஸ்லிம் சமூகம் மாத்திரம் வெளியேற்றப்பட்டது இனவாதம்.

ஏறாவூரில் நடுநிசியில் உறக்கத்திலிருந்து முஸ்லிம்களை மாத்திரம் குறி வைத்து கொன்றொழித்தது இனவாதம். காத்தான்குடியிலே பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களைச் சுட்டு அழித்தது இனவாதம். முஸ்லிம்கள் என்ற ஒரேயொரு காரணத்துக்காக மட்டக்களப்பு மாவடடத்திலே முஸ்லிம்கள் வாழ்ந்த 32 கிராமங்களை விட்டும் முஸ்லிம்களைத் துரத்தி அடித்து வெளியேற்றியது இனவாதம்.

அந்தக் கிராமங்களை இன்றுவரை கொடுக்காமல் இருப்பதும் இனவாதம். ஏறாவூர்பற்று பிரதேச செயலானர் பிரிவில் 1 இலட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் சதுர கிலோமீற்றர் காணிகள் இருக்கத் தக்கதாக ஏறாவூர் முஸ்லிம்களை வெறும் 923 ஏக்கர் காணிகளுக்குள் அடக்கி ஒடுக்கி வைத்திருக்கிறார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 பிரதேச செயலகப் பிரிவுகளில் 26 சத வீதம் வாழ்கின்ற முஸ்லிம்கள் வெறும் 1.3 வீதக் காணிகளுக்குள்ளேயே முடக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 2640 சதுர கிலோமீற்றர் காணிகளில் குறைந்த பட்சம் முஸ்லிம்களுக்கு 800 சதுர கிலோமீற்றராவது தரப்பட வேண்டும். இந்த விடயத்தில் சமூகம் விழிப்படைய வேண்டிய தேவை இருக்கின்றது.” என தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் ஏறாவூர் நகரசபை தவிசாளர் எஸ்.எம் நளீம், பிரதித் தவிசாளர் எம். எல். ரெபுபாசம், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள் உட்படப் பிரதேச பொதுமக்களும் ஊர்ப்பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US