அரசாங்கத்திற்கு மக்கள் நல்ல பாடத்தினை புகட்ட வேண்டும் - தவராசா கலையரசன்

Canada thavarasa kalaiyarasan Poththuvil
By Varunan Jun 15, 2021 07:02 PM GMT
Report

எரிபொருள் விலையேற்றத்தில் உரிய அமைச்சர் ஒரு கருத்தும், இந்த நாட்டின் தலைவர், ஏனைய அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு கருத்துமாக அவர்களுக்குள்ளேயே முட்டிமோதுகின்றார்கள்.

ஒரு சீரான அரசியலைச் செய்ய முடியாத தலைவர்களாக இந்த நாட்டின் தலைவர்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள். நாட்டு மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானவை என்பதை அவர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரனின் ஏற்பாட்டில் இன்றைய தினம் அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேசத்தில் கோவிட் நிலைமையால் பாதிப்புற்ற வறிய குடும்பங்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் அன்றாடம் உழைத்து வாழும் மக்களின் பொருளாதார நலிவு நிலையைச் சமாளிக்கும் வகையில் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் செயற்பாட்டின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இதன் போது யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் பொத்துவில் பிரதேச சபை உபதவிசாளர் பார்தீபன் உட்படப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது மிகவும் அராஜகமான அரசியல் நடந்து கொண்டிருக்கின்றது. கடந்த காலங்களில் மிக மோசமாகக் குற்றங்களைச் சுமத்தியவர்கள் தற்போது அதனை விட மோசமான செயற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நாட்டில் சாதாரண மக்கள் வாழ முடியாத ஒரு சூழலை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். நாட்டு மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் ஒரு பொய்யான வாக்குறுதிகள் என்பதை அவர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இன்று எரிபொருள் மாத்திரமல்ல விவசாயிகளும் வாழ முடியாத ஒரு நிலைமையை அவர்கள் ஏற்படுத்தியிருக்கின்றார்கள். உரம் மற்றும் கிருமிநாசினிகளை விவசாயிகள் பெற முடியாத நிலையில் இருக்கின்றார்கள்.

உரிய விலையை விட மேலதிகமாகத் தொகை கொடுத்து தங்கள் பயிர்களைக் காப்பற்றக் கூடிய சூழ்நிலைக்கு இன்று விவசாயிகள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். உர விடயத்தில் அரசாங்கம் முன்கூட்டியே விவசாயிகளுக்கான விளக்கங்களை வழங்கியிருக்க வேண்டும்.

எவ்வித முன்னறிவிதலுமின்ற இவ்வாறான செயற்பாடுகளை இந்த அரசாங்கம் செய்கின்றது. இன்று எரிபொருள் விலையேற்றத்தில் உரிய அமைச்சர் ஒரு கருத்தும், இந்த நாட்டின் தலைவர் ஒரு கருத்தும் ஏனைய அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் ஒவ்வொரு கருத்தும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு கருத்துமாக அவர்களுக்குள்ளேயே முட்டிமோதுகின்ற ஒரு நிலை காணப்படுகின்றது.

இதனைப் பார்க்கின்றபோது, ஒரு சீரான அரசியலைச் செய்ய முடியாத தலைவர்களாக இந்த நாட்டின் தலைவர்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறானவர்கள் எங்கள் மக்களைக் கவனிப்பார்களா என்ற கேள்வியே எழுகின்றது.

அது மட்டுமல்லாது எமது தமிழ் மக்களை எவ்வாறெல்லாம் நசுக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் அவர்களின் செயற்பாடுகள் இருக்கின்றன. இந்த அரசின் அனைத்து செயற்பாடுகளினூடாகவும் பாதிக்கப்பட்டவர்களாக நாங்களே இருக்கின்றோம்.

எனவே இந்த அரசாங்கத்திற்கு இந்த நாட்டின் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து ஒரு நல்ல பாடத்தினைப் புகட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

GalleryGalleryGallery
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US