அனைவருக்கும் இன்பமும் மகிழ்ச்சியும் பெருகட்டும்! -சாள்ஸ் நிர்மலநாதன் புத்தாண்டு வாழ்த்து
பிறக்கும் தமிழ் சித்திரை புதுவருடத்தில் எமது தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் ஆண்டாகவும் இன்பமும் மகிழ்ச்சியும் பெருகும் புதிய ஆண்டாகவும் மலரவேண்டும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலகத்தை பெரும் அச்சத்தில் ஆழ்த்திக்கொண்டுள்ள கோவிட் வைரஸ் தொற்று நோய் மக்களை விட்டு முற்றாக அழிந்து போகவேண்டும்.
தமிழ் மக்கள் என்றும் இல்லாதவாறு தற்போது கடுமையான இராணுவ நெருக்கடிக்குள் வாழ்ந்துவரும் தற்போதைய சூழ்நிலையில் எமது மக்களின் நீண்ட கால நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.
அதற்காகத் தொடர்ந்தும் எனது குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கும்.
சூழ்ச்சிகள் தோற்று
நியாயமான எமது போராட்டம் வெற்றி பெற வேண்டும்.
அனைவரின் வாழ்வில் மகிழ்ச்சி நிறையட்டும்!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam