பல மில்லியன் டொலர்கள் பெறுமதியான கைக்கடிகாரங்களை பயன்படுத்தும் அரசியல் வாரிசு
இலங்கையின் பிரபல அரசியல் குடும்பமொன்றின் வாரிசு ஒருவர் ஆறு தொடக்கம் ஏழு மில்லியன் டொலர்கள் பெறுமதியான கைக்கடிகாரங்களை பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.
இலங்கையின் கைக்கடிகார செயின் மற்றும் பர்ஸ் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ள சிட்னி என்பவர் மேற்குறித்த பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இவர் கோட்டா கோ கம போராட்டக்களத்திலும் முன்னின்று அரசாங்கத்துக்கும் ராஜபக்ச குடும்பத்துக்கும் எதிராக போராடிக் கொண்டிருக்கின்றார்.
இலங்கையின் முக்கிய அரசியல் குடும்பமொன்றின் வாரிசு
இந்நிலையில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் அவர் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையின் முக்கிய அரசியல் குடும்பமொன்றின் வாரிசு ஒருவர் பயன்படுத்தும் கைக்கடிகாரங்கள் அனைத்தும் வௌிநாடுகளில் இருந்து விசேடமாக இறக்குமதி செய்யப்பட்டவையாகும்.
Patek Philippe மற்றும் Rolex போன்ற விலை உயர்ந்த கைக்கடிகாரங்களை மட்டுமே அவர் பயன்படுத்துகின்றார்.
அவற்றில் ஒவ்வொன்றும் 6 தொடக்கம் 7 மில்லியன் டொலர்கள் பெறுமதி கொண்டவையாகும். அவரிடம் உளள கைக்கடிகாரங்களை விற்பனை செய்தால் மட்டுமே இலங்கை்கு எட்டுக்கும் மேற்பட்ட எண்ணெய்க் கப்பல்களை தருவித்துக் கொள்ள முடியும்.
அவரது சகோதரர்களாலும் அவ்வாறான பெறுமதியான கைக்கடிகாரங்களே ஏராளம் பயன்படுத்தப்படுகின்றன. அவை அனைத்தும் பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும் என்றும் சிட்னி தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.





ஷாக்கிங் விஷயத்தை கூறிய செந்தில், கோபத்தில் திட்டிவிட்ட மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

நிலாவிடம் வம்பிழுத்தவர்களை தரமான சம்பவம் செய்த குடும்பத்தினர்.. அய்யனார் துணை தெறிக்கும் எபிசோட் Cineulagam
