யாழ். நெல்லியடியில் வீடு புகுந்து பொலிஸார் தாக்குதல்! வெளியான பின்னணி
யாழ். நெல்லியடியில் வீடு புகுந்து பொலிஸார் தாக்குதல் நடத்துவது போன்ற காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
குறித்த சம்பவம் இன்று(24.03.2025) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் அதிகாரி
எனினும் சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
“யாழ்ப்பாணம். நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றுக்குள் பொலிஸார் நுழைந்து பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற காணொளி அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
சில ஊடக பதிவுகளில் பொலிஸார் காலால் உதைத்து பெண்களை தாக்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முகநூலில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும் குறித்த காணொளியை பகிர்ந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.
எனினும், சமூக ஊடகங்களில் குறிப்பிடப்படுவதை போன்ற செயற்பாடு இது அல்ல என ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இராமநாதன் அர்ச்சுனா குறிப்பிடுவதை போலவோ அங்கு பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும், சம்பவத்தை திரித்து, பொலிஸாரின் கைது நடவடிக்கையிலிருந்து குற்றவாளியை பாதுகாப்பதற்காக பெண்கள் ஆடிய நாடகமே அந்த சம்பவமாகும் எனவும் குறித்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக மாடு வெட்டும் நபர்
இதன்படி வெளியாகிய மற்றுமொரு காணொளியில் இந்த விடயம் தெளிவாகிறது.
நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துன்னாலை பகுதியில் இன்று (24) இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
அந்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் சட்டவிரோதமாக மாடு வெட்டும் தொழிலில் நீண்டகாலமாக ஈடுபட்டு வருவதாகவும், அதற்காக குளிரூட்டப்பட்ட வாகனமொன்றை பயன்படுத்துவதாகவும் பொலிஸாருக்கு நீண்டகாலமாக தகவல் கிடைத்து வந்துள்ளது.
இன்று அவரது வீட்டில் சட்டவிரோதமாக மாடு வெட்டப்படுவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்ததாகவும், இதன்போது நெல்லியடி பொலிஸார் சிலர் அவரது வீட்டுக்கு சென்று சோதனையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதன்போது, சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மாட்டின் இறைச்சி மீட்கப்பட்டதாகவும், எனினும், சந்தேகநபர் தப்பியோடி, வீட்டுக்குள் நுழைந்ததாகவும் கூறப்படுகிறது.
காணொளி
பொலிஸாரின் நடவடிக்கை
அறைக்கதவை திறக்குமாறு பொலிஸாரின் கூறிய போதும், அவர் கதவை திறக்கவில்லை என்றும், பெண்கள் திரண்டு பொலிஸாரின் நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன்போது கைது செய்ய சென்ற பொலிஸ் குழு பொலிஸ்நிலையத்துக்கு தகவல் வழங்கியதினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மேலும் ஒரு பொலிஸ் குழு அனுப்பப்பட்ட போதும்.,அறையை திறக்க விடாமல் பெண்கள் வழிமறித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இறுதியாக நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் மேலுமொரு அணி சென்றே சந்தேகநபரை கைது செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சந்தேகநபரை பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தியவேலை அவருக்கு எதிராக தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததன் காரணமாக குற்றவாளியின் மனைவியும், மற்றொரு பெண்ணும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதோடு, அதில் ஒருவர் சிறிய குழந்தையின் தாய் என்பதன் அடிப்படையில் எச்சரிக்கை செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 3 நாட்கள் முன்

2030வாக்கில்... பிரித்தானியர்களுக்கு கவலையை ஏற்படுத்தும் செய்தி ஒன்றை தெரிவித்துள்ள ஆய்வு News Lankasri
