வீதியோரங்களில் வாகனங்களை நிறுத்துவோருக்கு பொலிஸார் எச்சரிக்கை
வீதி ஓரங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்பவர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வீதிகளுக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களின் பாகங்களை அகற்றி விற்பனை செய்யும் பாரிய மோசடியை வெளிக்கொண்டு வருவதற்கு வெள்ளவாய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு, சோதனையை மேற்கொண்டுள்ளது.
இந்த சோதனையின் விளைவாக இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் அதிகாரிகள் பறிமுதல்
சந்தேக நபர்கள் வாகனங்களின் மதிப்புமிக்க பாகங்களை மிக நுணுக்கமாக அகற்றி, அவற்றை ஒரு சிறிய வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்றுள்ளனர்.
திருடப்பட்ட வாகனங்களில் இருந்து ஒரு மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள வாகன பாகங்களையும் பொலிஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
அனுராதபுரம் மற்றும் மொனராகலையை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் குறித்து வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





காணாமல் ஆக்கப்பட்டோர் தினமும் தாய்மாரின் கண்ணீரும்....! விடை தான் என்ன 19 மணி நேரம் முன்

நடிகர் பிரபு தேவாவின் பிரம்மாண்ட வீட்டை நீங்கள் பார்த்து இருக்கீங்களா.. புகைப்படங்கள் இதோ Cineulagam

உலகின் சக்திவாய்ந்த டாப் 10 பாஸ்போர்டுகள்: அமெரிக்கா, சீனா இல்லை.. முதலிடம் பிடித்த நாடு எது? News Lankasri
