புதிதாக வீடுகளை நிர்மாணிப்போர் அவதானம் - விளம்பர மோசடி தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
சமூக வலைத்தளங்கள் ஊடாக கட்டடப்பொருட்களை விற்பனை செய்வதாகக்கூறி முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கூரைத்தகடுகள், சிமெந்து மற்றும் ஏனைய கட்டடப்பொருட்களை சந்தை விலையை விட கணிசமாக குறைந்த விலைக்கு தருவதாக விளம்பரம் செய்து மோசடியில் ஈடுபடுவதாக பொலிஸ் தலைமையகம் எச்சரித்துள்ளது.
போலியாக பணப்பரிவர்த்தனை
குறித்த பொருட்களை சந்தேகநபர்கள் ஒப்பந்த அடிப்படையில் வழங்குவதாக வாடிக்கையாளரின் பகுதியில் உள்ள வியாபாரியை தொடர்புகொண்டு, அந்த பொருட்களை வாடிக்கையாளரின் முகவரிக்கு விநியோகிக்க ஏற்பாடு செய்வதாக போலியாக பணப்பரிவர்த்தனை செய்கின்றனர்.

இதனையடுத்து பொருட்கள் வாடிக்கையாளர்களின் முகவரிக்கு வந்ததும் சாரதி பணம் கேட்கும் போதே தாம் ஏமாற்றப்பட்டதை வாடிக்கையாளர்கள் அறிவதாகவும் கூறப்படுகின்றது.
இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்கள் மூலம் குறைந்த விலையில் பொருட்களைக் கொள்முதல் செய்யும் போது விற்பனையாளர்களின் அடையாளம் மற்றும் விளம்பரங்களின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | கொடியேற்றம்