திருகோணமலை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டத்தில் குழப்பம் : ரஜீவ்காந்த் கைது

Missing Persons Trincomalee Eastern Province
By Independent Writer Aug 30, 2024 06:24 AM GMT
Report
Courtesy: Roshan

புதிய இணைப்பு 

திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட போராட்டத்தில் பொலிஸாருக்கும் ஆர்பாட்டக்காரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக பெரும் பதற்றமான சூழ் நிலை நிலவுகிறது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக திருகோணமலை பொலிஸ் நிலையம் முன்பாக பெருந்திரளான மக்கள் கூடியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முதலாம் இணைப்பு

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தினத்தத்தை முன்னிட்டு இன்றைய தினம் வடக்கு கிழக்கில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில் இன்று (30) காலை போராட்டம் ஆரம்பமானது.


இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்பில் இருந்து சென்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் சென்ற பேருந்தை வெருகல் பகுதியில் உள்ள பொலிஸார் தடுத்து நிறுத்தி திருகோணமலைக்கு செல்ல முடியாது என தெரிவித்து சென்றவர்களை அச்சுறுத்தியுள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்திற்கான தடையை நிராகரித்த நீதிமன்றம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்திற்கான தடையை நிராகரித்த நீதிமன்றம்

பொலிஸாருடன் வாக்குவாதம்

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் உறவினர்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இறுதியில் அப்பகுதியில் இருந்து திருகோணமலை செல்வதற்கு பொலிஸார் அனுமதி வழங்கியுள்ளனர்.

திருகோணமலை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டத்தில் குழப்பம் : ரஜீவ்காந்த் கைது | Police Threatened Protest For The Missing Persons

இந்நிலையில், வடக்கு கிழக்கு முழுவதும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரும்  கவனயீர்ப்பு போராட்டம்  முன்னெடுக்கப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக கிளிநொச்சியில் சர்வதேச காணாமல் ஆக்கபட்டோர் தினத்தை முன்னிட்டு இன்று (30) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கந்தசாமி கோயில் முன்றலில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகிய போராட்டம் கிளிநொச்சி டிப்போச் சந்திக்கு அண்மித்த பகுதியில் உள்ள மீனாட்சியம்மன் கோயில் நிறைவு பெற்றது.

மேலதிக தகவல் - யது

யாழ்ப்பாணம்

சர்வதேச நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மாபெரும் போராட்ட பேரணியொன்றை யாழ்ப்பாணத்தில் இன்று காலை ஆரம்பித்துள்ளனர். 


இதற்கமைய வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இந்த மாபெரும் போராட்டத்தை யாழில் முன்னெடுத்துள்ளனர்.

திருகோணமலை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டத்தில் குழப்பம் : ரஜீவ்காந்த் கைது | Police Threatened Protest For The Missing Persons

யாழ் ஆரியகுளம் சந்தியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்ட பேரணி யாழ் நகரைச் சுற்றி வந்து நிறைவடையவுள்ளது. 

செய்தி - தீபன்

அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது தினமானது இன்றையதினம் சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கப்படுகிறது.

அந்தவகையில் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்திற்கு முன்னால், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி போராட்டம் ஒன்று இன்று மதியம் முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டத்தில் குழப்பம் : ரஜீவ்காந்த் கைது | Police Threatened Protest For The Missing Persons

இந்த போராட்டமானது யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தி, வாய்களை கறுப்பு துணியால் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தி - கஜிந்தன்

மருந்து இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உத்தரவு

மருந்து இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உத்தரவு

கொழும்பில் நடைபெற்ற சௌமியமூர்த்தி தொண்டமானின் ஜனன தின நிகழ்வு

கொழும்பில் நடைபெற்ற சௌமியமூர்த்தி தொண்டமானின் ஜனன தின நிகழ்வு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US