சிறுமியொருவர் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்து! திலும் அமுனுகமவுக்கு பொலிஸார் அழைப்பு
முன்னாள் அமைச்சரும் சர்வஜன பலய தேசிய அமைப்பாளருமான திலும் அமுனுகம சமீபத்தில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்தொன்று தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக பொலிஸார் அழைப்பாணை விடுத்துள்ளனர்.
அநுராதபுர பிரதேசத்தில் தேரர் ஒருவரினால் தவறான செயற்பாட்டிற்கு உள்ளாக்கப்பட்ட சிறுமியொருவர் தொடர்பில் சமீபத்திய ஊடக சந்திப்பொன்றின்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
சர்ச்சைக்குரிய கருத்து
இச்சம்பவம் குறித்த விசாரணை தற்போது நடைபெற்று வரும் நிலையில், வழக்குடன் தொடர்புடைய சிறுமிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்படும் இந்த கருத்துக்கள் குறித்து முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப். யு. வூட்லர் தெரிவித்தார்.

தனது தரப்புக்கு கிடைத்த தகவலின்படி, 'சமூகப்பிறழ்வான நடத்தையில் ஈடுபடும் தொழிலாளி' அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அநுராதபுரம் அடமஸ்தானாதிபதி தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக திலும் அமுனுகம ஊடக சந்திப்பில் தெரிவித்ததை அடுத்து பெரும் எதிர்ப்பு எழுந்தது.
15 வயது சிறுமி சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வழக்கில் இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்தியதை பலர் கேள்விக்குள்ளாக்கியதால், இந்த கருத்துக்களுக்கு சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அவ்வாறான பலதரப்பு விமர்சனங்களைத் தொடர்ந்து, தனது கருத்துக்கள் இவ்வழக்குடன் தொடர்புடைய சிறுமியைக் குறித்தவை அல்ல என்றும், சமூக ஊடகங்களில் தனது கருத்துக்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளன என்றும் அமுனுகம தெளிவுபடுத்தினார்.
இந்தக்கூற்று, நிட்டம்புவ பகுதியில் நடந்த ஒரு தனிப்பட்ட சம்பவம் குறித்து தனக்குக் கிடைத்த தகவலைக் குறித்து வெளியிடப்பட்டதாகவும், நடைபெற்று வரும் வழக்கில் சம்பந்தப்பட்ட சிறுமியை குறிக்கவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
பகிரங்கமாக மன்னிப்புக்கோரிய திலும் அமுனுகம
'ஒரு தவறான புரிதலின் காரணமாக, அந்தக் கருத்து சிறுமிக்கோ, சிறுமியின் குடும்பத்தினருக்கோ அல்லது சமூகத்தில் உள்ள யாருக்கேனும் மனக்காயத்தை ஏற்படுத்தியிருந்தால், நான் எனது வருத்தத்தைத் தெரிவித்து மன்னிப்புக் கோருகிறேன்' என்றும் திலும் அமுனுகம பகிரங்கமாக மன்னிப்புக் கோரியிருந்தார்.

இதற்கிடையில்இ இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவராகவும் சாட்சியாகவும் அடையாளம் காணப்பட்டுள்ள சிறுமிக்கு அந்தக் கருத்துக்கள் பாரபட்சத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும் என்று தெரிவித்து, சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு, அந்தக் கருத்துக்கள் குறித்து விசாரிக்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்திருந்தது.
2023-ஆம் ஆண்டின் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கு உதவுதல் மற்றும் பாதுகாத்தல் சட்டம் எண் 10-இன் கீழ், அமுனுகமவின் கருத்து ஒரு குற்றமாக அமையக்கூடும் என்று சிறுவர் மறறும் மகளிர் விவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அதனடிப்படையில் தனது கருத்துக்கள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்கு வருமாறு திலும் அமுனுகமவிற்கு பொலிஸார் அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.
கொழும்பில் பல பகுதிகளில் பெண்களை அச்சுறுத்தி வந்த நபர் அதிரடியாக கைது - சிக்கிய பெருந்தொகை தங்க நகைகள்
குடும்பத்தினரைப் பார்க்காமல் நான்கு ஆண்டுகள்... வெளிநாட்டில் கோர விபத்தில் சிக்கிய ஆசிய இளைஞர் News Lankasri
தமிழ்நாட்டில் அதிக 100 கோடி வசூல் திரைப்படங்களை கொடுத்த நடிகர்கள்.. முதலிடத்தில் யார் தெரியுமா? Cineulagam