பிலியந்தல துப்பாக்கிச்சூடு! பொலிஸார் மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் - விசாரணையில் வெளியான தகவல்
புதிய இணைப்பு
பிலியந்தலை, வீரசிங்க மாவத்தை பகுதியில் இன்று காலை (19) கூர்மையான ஆயுதத்தால் பொலிஸாரை தாக்கிய நபர் மீதே துப்பாக்கிச்சூடு நடந்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது கூர்மையான ஆயுத தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரியும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேகநபரும் தற்போது கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கூர்மையான ஆயுதங்களால் தாக்குதல்
கூர்மையான ஆயுதங்களை ஏந்தியபடி இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு சந்தேகநபர்கள், பொரலஸ்கமுவ பகுதியில் உள்ள ஒரு வீட்டை தாக்கி அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர்.
இதன்பின்னர், சந்தேகநபர்கள் பிலியந்தலாவை நோக்கி தப்பிச்செல்வதாக பொரலஸ்கமுவ பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, பிலியந்தலாவ பொக்குந்தர வீரசிங்க மாவத்தை பகுதியில் பொலிஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, தப்பிச்சென்ற இரண்டு சந்தேகநபர்களின் மோட்டார் சைக்கிளை நிறுத்த பொலிஸ் அதிகாரிகள் பெரும் முயற்சி மேற்கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் சாரதி தனது கையில் இருந்த கூர்மையான ஆயுதத்தால் பொலிஸ் அதிகாரியை தாக்கியுள்ளார்.
இதையடுத்து, தற்காப்பு நடவடிக்கையாக பொலிஸ் அதிகாரியை மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில், சந்தேகநபரின் இடுப்புப் பகுதியில் குண்டு பாய்ந்ததில் அவர் கீழே விழுந்துள்ளார்.
இதனையடுத்து காயமடைந்த 24 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிளைச் செலுத்திய மற்றைய நபர் தப்பிச்சென்றுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பண்டாரகம, வீதியகொடவைச் சேர்ந்த 24 வயது இளைஞர் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தாக்குதலுக்குள்ளான வீட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவரும் களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை மற்றும் பொரலெஸ்கமுவ பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டாம் இணைப்பு
பிலியந்தலை, வீரசிங்க மாவத்தை பகுதியில் போதைப்பொருள் வழக்கு தொடர்பாக இன்று காலை (19) நடத்தப்பட்ட சோதனையின் போது துப்பாக்கிச்சூடு நடந்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் வாகனத்தில் வந்த இரண்டு நபர்களிடம் விசாரணை நடத்த முயன்றபோது, சந்தேகநபர்களில் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் பொலிஸாரரை தாக்க முயன்றுள்ளார்.
இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், சந்தேகநபர்களில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இவ்வாறு காயமடைந்த சந்தேக நபர் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் வாகனத்தில் வந்த மற்றொரு நபர் அப்பகுதியிலிருந்து தப்பிச்சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
முதலாம் இணைப்பு
பிலியந்தலை, வீரசிங்க மாவத்தை பகுதியில் சந்தேகத்திற்கிடமான இருவரை சோதனையிட முற்பட்ட போது பொலிஸாரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
இன்று (19) காலை இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் தற்போது களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஓய்வெடுக்க தாய்லாந்து சென்றுள்ள நடிகை சமந்தா... தங்கும் அறையின் ஒரு நாள் வாடகை எத்தனை லட்சம் தெரியுமா? Cineulagam
இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! Manithan