கனடாவில் இளம்பெண் தொடர்பில் பொது மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்
கனடாவில் 17 வயதான இளம்பெண் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் இருந்து காணாமல்போயுள்ளார்.
வின்னிபெக் பொலிஸார் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி ஜோய் சர்த்ரண்ட் என்ற 17 வயது இளம் பெண் கடந்த 25ஆம் திகதி வின்னிபெக் Mountain மற்றும் McGregor பகுதியில் கடைசியாக காணப்பட்டுள்ளார்.
5 அடி 4 அங்குலம் உயரம் கொண்ட ஜோய் 120 பவுண்ட்ஸ் எடை கொண்டவர் ஆவார். அவரை கண்டுபிடிப்பது தொடர்பில் பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
ஜோய் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தங்களுக்கு தெரிவிக்கலாம் என தொலைபேசி எண்ணை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.