தொழில் - உணவு- உறையுள் வழங்கியவரே கொலை செய்த 'பஸ் லலித்'! மறைந்திருக்கும் பல மர்மங்கள் துலக்கம்...
ஹங்வெல்ல பஸ் நிலையத்தில் மெலிந்த உடலமைப்புடன் வேலைக்காக காத்திருந்தவரை அழைத்து சென்று உணவு உறையுள் வழங்கியது மட்டுமல்ல தனது பஸ்ஸில் நடத்துனராக தொழில் வழங்கியவரையே இறுதியில் கப்பம் கொடுக்கவில்லை என படுகொலை செய்த படுபாதக கொடுமையை செய்தவர் தான் லலித் கண்ணங்கர என்றழைக்கப்படும் பஸ் லலித் ஆவார்.
டுபாயில் பல காலத்திற்கு முன் கைது செய்யப்பட்டவர் இன்று அதிகாலை இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு மத்திய குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு எதிராக எட்டு கொலைக் குற்றச்சாட்டு மற்றும் கப்பம் மற்றும் அச்சுறுத்தல் என பல குற்றங்களை செய்தவராவார்.லலித் கண்ணங்கர என்ற 'பஸ் லலித்' 72 மணிநேரம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவார் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.பஸ் லலியின் மறைந்துள்ள மர்மங்கள்..
ஹங்வெல்ல பஸ் நிலையத்தில் ஆரம்பமான விதம்
ஹங்வெல்ல நகர பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்த மெலிந்த உடலமைப்பைக் கொண்ட இளைஞன் மீது வஜிர நிசாந்த என்ற தொழிலதிபர் அவதானித்தார். தனியார் பஸ்களின் ஓட்டுநர்கள் அருகே சென்று அவர்கள் முன்னிலையில் கெஞ்சும் விதத்தைக் கண்ட அவர் நிசாந்தவின் மனதில் ஏதோ ஒரு கவலை ஏற்பட்டது.
வஜிர இந்த மெலிந்த இளைஞனை அழைத்தார். 'நான் சில நாட்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தம்பிஇ நீ இங்கே டிரைவர்களிடம் குனிந்து நெளிந்து தற்காலிக வேலை கேட்கிறாய். வேலை எதுவும் இல்லையா?' என்று.
'ஐயோ இல்லை அண்ணா நான் ஒன்று இரண்டு நாட்கள் இந்த பஸ்களில் நடத்துநராக வேலை செய்தேன். ஆனால் அவர்கள் எனக்கு தினமும் வேலை தருவதில்லை. நான் மிகவும் கஷ்டப்பட்டு தான் வாழ்கிறேன்.
அண்ணனுக்கு புண்ணியமாகப் போகும் முடிந்தால் எனக்கு ஒரு வேலை கொடுங்கள்' என்று அந்த மெலிந்த இளைஞன் வஜிரவின் முன்னிலையில் கெஞ்சினான். அப்போது வஜிரவுக்கு அந்த மெலிந்த இளைஞன் மீது மிகுந்த இரக்கம் ஏற்பட்டது.

'சரி தம்பிஇ நீ நாளை முதல் என்னுடைய பஸ்ஸில் நடத்துனர் வேலைக்கு வா. ஆனால் நேர்மையாக வேலை செய்ய வேண்டும். அப்படி இருந்தால்தான் என்னிடம் நிலைத்து நிற்க முடியும்.'
வஜிர நிசாந்தவுக்குச் சொந்தமான பஸ்ஸில் நடத்துனர் வேலையைப் பெற்றுக்கொண்ட லலித் கன்னங்கர நீண்ட காலமாக அந்த வேலையைச் செய்து வந்தான். வஜிர நிசாந்த என்பவர் மிகவும் நற்குணங்கள் கொண்ட ஒரு தொழிலதிபர்.
ஹங்வெல்ல நிலுவன்துடவையை வசிப்பிடமாகக் கொண்ட வஜிர இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். ஆறு ஏழு பஸ்களின் உரிமையாளரான அவர் ஹங்வெல்லயில் அனைவராலும் அறியப்பட்ட ஒரு பிரபல நபராக இருந்தார்.
பஸ் போக்குவரத்து தொழிலுக்கு மேலதிகமாக வாகன விற்பனை நிலையம் மற்றும் வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை செய்து வந்த வஜிர பெரும் சொத்துக்களைக் கொண்ட ஒரு தொழிலதிபராக இருந்தார்.
தங்க வைத்து உணவளித்த தொழிலதிபர்
ஹங்வெல்ல பஸ் நிலையத்தில் ஆதரவின்றி தவித்துக்கொண்டிருந்த லலித் கன்னங்கரவுக்கு வேலையளித்துஇ அவனுக்கு ஒரு வருமான வழியையும் ஏற்படுத்திக் கொடுத்ததுஇ அவன் என்றாவது ஒரு நாள் நல்ல மனிதனாக மாறுவான் என்று நினைத்தே.
'தம்பி உனக்கு தங்குவதற்கும் இடம் இல்லை அல்லவா? அதனால் எங்கள் வீட்டில் தங்கி வேலை செய். நீ என்னிடம் நன்றாக நடந்து கொண்டால் உனது எதிர்காலம் நன்றாக இருக்கும்.'
வஜிர நிசாந்த இந்த முகமறியாத நபருக்குத் தனது வீட்டில் தங்குவதற்கு இடம் கொடுத்தhர்.ஆனால் லலித் கன்னங்கர ஒரு மிருகத்தனமானவன் என்பதை வஜிர நிசாந்த கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.
ஹங்வெல்லவுக்கு வரும்போதே இவன் பல மோசமான செயல்களைச் செய்திருந்தது. வஜிரவுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. லலித் கன்னங்கர எம்பிலிபிட்டிய பிரதேசத்தின் மிகவும் பின்தங்கிய ஒரு கிராமத்தில் பிறந்தவன்.

சரியான கல்வி கிடைக்காததாலேயே அவனால் நல்லதொரு வேலையைச் செய்ய முடியாமல் போனது. எம்பிலிபிட்டியவில் பல்வேறு தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்ட லலித் கன்னங்கரஇ முழு கிராமத்திற்குமே வெறுப்பை ஏற்படுத்திய ஒரு நபராக மாறினான்.
அழகிய பெண்கள் குளிக்கும் இடங்கள் மற்றும் இரவில் பெண்கள் ஓய்வெடுக்கும் அறைகளுக்குள் புகுந்து அவர்களுக்கு தொல்லை கொடுக்கும் கிரீஸ் மனிதன் லலித் கன்னங்கர தான் என தெரியவர கிராமத்தை விட்டு ஹங்வெல்லவுக்கு தப்பி ஓடினான்.
அதற்கு மேல் அந்த கிராமத்தில் வாழ்வதற்கான சூழல் அங்கு இருக்கவில்லை. லலித்தின் இந்த தவறான நடவடிக்கைகளால் இறுதியில் குடும்பத்தினரும் அந்த கிராமத்தை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று.
வஜிரவின் வீட்டில் அனைவரின் நல்ல எண்ணத்தையும் பெற்று வேலை செய்து வந்த லலித்இ குறுக்கு வழியில் அதிக பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் காட்டினான். வஜிரவின் தாய் லலித் கன்னங்கரவை தனது சொந்தப் பிள்ளையைப் போலவே நடத்தினார்.
உணவளித்தது மட்டுமன்றி லலித்தின் ஆடைகளைக் கூட வஜிரவின் தாயாரே துவைத்துச் சுத்தம் செய்து கொடுத்துள்ளார்.
லலித் ஆரம்பித்த புதிய வியாபாரம்
நடத்துனர் வேலை செய்யும் அதேவேளையில் லலித் கன்னங்கர பணத்தைச் சேமிக்கத் தொடங்கினான். பஸ் வருமானத்திலிருந்து தினமும் ஒரு தொகைப் பணத்தைத் திருடிச் சேமித்த லலித் எதிர்காலத்தில் ஏதேனும் ஒரு தொழில் செய்ய வேண்டும் என்ற கனவோடு அந்தப் பணத்தைச் சேமித்தான்.
சில வருடங்கள் கழிந்த நிலையில் நான் ஹங்வெல்ல பக்கத்தில் ஒரு சிறிய கடை பார்த்திருக்கிறேன். அதில் ஒரு கம்யூனிகேஷன் தொடங்க வேண்டும் என்று ஒரு நாள் லலித் தனது முதலாளியான வஜிரவிடம் கூறினான்.
பஸ் நடத்துனர் வேலைக்கு விடை கொடுத்த லலித் ஹங்வெல்ல நகரில் ஒரு கம்யூனிகேஷன் வர்த்தகத்தை தொடங்கினான். இக்காலகட்டத்தில் கடுவெல பாதாள உலகத்தில் கொடிகட்டிப் பறந்தவன் தான் 'ரணாலே சமயன்'.
சமயனின் பாதாள உலக ஆதிக்கம் ஹங்வெல்ல பிரதேசம் முழுவதும் பரவியிருந்தது. லலித் கன்னங்கரவுக்கும் இந்த பாதாள உலகத்தைப் பற்றி விவரிக்க முடியாத ஆர்வம் இருந்தது.அதனாலே அவர் மெதுவாக பாதாள உலகத்துடன் இணைந்து கொண்டுள்ளார்.
குற்றவாளிகளோடு வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த அரசியல்வாதிகள்! ஆதாரங்களை அழிக்க அரங்கேற்றிய துப்பாக்கிச்சூடுகள்