கஸ்ஸப தேரர் நடத்திய நாடகம்.. அதிரடியாக களமிறங்கியுள்ள புலனாய்வாளர்கள்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கலகொட அத்தே ஞானசார தேரரை உடனடியாக விடுதலை செய்யக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, பலாங்கொட கஸ்ஸப தேரர் பொலிஸாரால் தாக்கப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து கொழும்பு குற்றப்பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, உலபனே சுமங்கல தேரரிடமிருந்து கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் இன்று வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்துள்ளனர்.
வாக்குமூலம் பதிவு
பலாங்கொட கஸ்ஸப தேரர் பொலிஸாரால் தாக்கப்பட்டதாகக் கூறி, இதுவரை எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, பொலிஸாரால் தாக்குதல் ஏதேனும் நடத்தப்பட்டதா என்பதைக் கண்டறியுமாறு, பதில் பொலிஸ் மா அதிபர் கொழும்பு குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, பொலிஸ் அதிகாரிகள் உலபனே சுமங்கல தேரர் பணியாற்றும் பாடசாலைக்குச் சென்று, அவரிடம் சுமார் மூன்று மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
YOU MAY LIKE THIS..