சிறுமியின் கொலையில் மர்மம் - ரிஷாட்டின் மனைவியிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு
வீட்டில் பணியாற்றிய சிறுமியின் மரணம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவியிடம் தற்போது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்கு சென்றுள்ள பொரளை பொலிஸை சேர்ந்த விசேட குழு ஒன்று அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹட்டன், டயகம பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்து வந்த நிலையில் கடந்த தினம் உயிரழந்திருந்தார்.
குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாடாளவிய ரீதியில் பல்வேறு தரப்பினரும் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த மரணம் தொடர்பில் பொலிஸாரினால் பல்வேறு கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஒரு பூப்புனித நீராட்டு விழாவும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமும் 9 மணி நேரம் முன்
வன்முறையாக உருவெடுப்பதற்கு முன்னர் தடுத்து நிறுத்துங்கள் - தமிழக முதல்வருக்கு யாழ்.கடற்றொழிலாளர் அமைப்பு கோரிக்கை!
கட்டுவான தீ விபத்தில் 5 பேர் பலி..! பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட தொழிலாளர்கள்: தீயை கட்டுப்படுத்த கடும் பிரயத்தனம்