முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துக்கொண்டமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனிடம் இல்லத்தில் வைத்து மட்டக்களப்பு பொலிஸாரால் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது.
வாக்கு மூலத்தில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கண்டன பேரணியில் மட்டக்களப்பு நீதிமன்ற தடையுத்தரவை மீறி செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே பொலிஸாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட வாக்கு மூலத்தின் போது தமக்கு மட்டக்களப்பு பொலிஸாரால் நீதிமன்ற தடையுத்தரவு வழங்கப்படவில்லை எனவும், இது ஜனநாயக ரீதியான மக்கள் போராட்டம் என்பதால் மக்களுடன் கலந்துகொள்வதற்கு உரிமை இருப்பதால் தாம் மக்களுடன் கலந்துகொண்டதாக பா.அரியநேத்திரன் தெரிவித்தாகவும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தில் கலந்து கொண்ட புகைப்பட ஆதாரத்துடன் அதனை காட்டி விசாரணைகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.



