போதை விருந்தில் பெண்களுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரிகள்
மொரட்டுவ கட்டுபெத்த பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் போதை விருந்தொன்றை நடத்திக் கொண்டிருந்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களும் இரண்டு பெண்களும் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.
அங்குலான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் விசேட பணியகத்தின் புலனாய்வு அதிகாரியாக கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும், தெஹியத்தகண்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொரட்டுவை தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு கிடைத்த தகவலுக்கமைய அங்குலான பொலிஸ் கான்ஸ்டபிள் தங்குமிடத்தை சுற்றிவளைத்து சந்தேக நபர்களை சோதனை செய்துள்ளனர்.
போதைப்பொருள்
இதன் போது ஒரு கிராம் ஹேஷ் போதைப்பொருள் மற்றும் 20 மில்லிகிராம் போதைப்பொளை தெஹியத்தகண்டிய பொலிஸ் கான்ஸ்டபிள் கண்டுபிடித்துள்ளார்.
சந்தேகநபர்கள் இருவரிடமும் 260 மில்லிகிராம் போதைப்பொருள் , இலத்திரனியல் தராசு, மற்றும் ஏனையவை சந்தேகநபரிடம் இருந்து மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு பயன்படுத்தப்படும் பல உபகரணங்களுடன் 40 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெஹியத்தகண்டிய பொலிஸ் கான்ஸ்டபிள் கடமையாற்றிய போது இந்த விருந்தில் கலந்துகொண்டதாக தெரியவந்துள்ளது.





கிளைமேக்ஸ் மற்றும் அந்த 20 நிமிடம், ரஜினியின் கூலி படம் பற்றி வந்த முதல் விமர்சனம்... மாஸ் போங்க Cineulagam

சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam

நாங்கள் அழிந்தால்…பாதி உலகை சேர்த்து அழித்து விடுவோம்! உலக நாடுகளுக்கு பாகிஸ்தான் அச்சுறுத்தல் News Lankasri
