முன்னாள் பொலிஸ் அதிகாரியின் மோசமான செயல் - 6 இளம் பெண்களுடன் கைது
குருணாகலில் முன்னாள் பொலிஸ் அதிகாரியினால் முன்னெடுக்கப்பட்ட தகாத தொழில் நடவடிக்கை பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
தங்கும் அறைகளை வாடகைக்கு விடுவதாகக் கூறி, இந்தத் தொழில் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது நான்கு ஆண்களுடன் தகாத தொழில் ஈடுபட்ட ஆறு யுவதிகளையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர்.
குருணாகல், கண்டி வீதியில் கட்டுவான சந்திக்கு அருகில் தங்குமிடம் என்ற போர்வையில் இந்த தகாத விடுதி நடத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் தங்கியிருந்த அறையை சோதனையிட்டபோது, ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
விபசாரத்தில் ஈடுபடும் யுவதிகள் இந்தப் போதைப்பொருட்களை பயன்படுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
