பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகள்! விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு...
ஏராளமான நிவாரணக் குழுக்கள் மற்றும் கனரக வாகனங்களின் வருகை காரணமாகப் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீதிகளைச் சுத்தம் செய்யும் பணி மற்றும் மீட்புப் பணிகளைத் தாமதப்படுத்துவதாக பொலிஸாரால் தெரிவித்துள்ளது.
பொலில் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முக்கிய வேண்டுகோள்
அதேநேரம் சில மாவட்டங்களில், பாதிக்கப்பட்ட இடங்களைப் படம்பிடிக்கும் அல்லது பார்வையிடும் வாகனங்கள், உந்துருளிகளின் வருகை நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு இடையூறை விளைவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக, நிவாரணக் குழுக்கள் பிரதேச செயலாளர்களுடன் ஒருங்கிணைந்து பொதுமக்களுக்கு உதவி திறம்படச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தநிலையில் உதவி வழங்க விரும்பும் பொதுமக்கள் பேரிடர் செயற்பாட்டு மையத்தைத் தொடர்பு கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
பொலிஸார் சிறப்பு செயற்பாட்டு மைய தொடர்பு எண்களான 071‑8595884, 071‑8595883, 071‑8595882, 071‑8595881 மற்றும் 071‑8595880 எண்களைத் தொடர்பு கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியா நடிக்க வருவதற்கு முன் எப்படி இருந்தார் பாருங்க.. புகைப்படம் இதோ Cineulagam