கர்தினாலின் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த பொலிஸார்
கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் குற்றச்சாட்டுக்களை பொலிஸார் நிராகரித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமையன்று வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுடன் மெய்நிகர் தொழில்நுட்பத்தின் ஊடாக கலந்து கொண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்து கர்தினால் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
தாக்குதல் குறித்த விசாரணைகளின் அடிப்படையில் உயர் நீதிமன்றில் 12 வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும், 42 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது என தெரிவிக்கின்றனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கர்தினால் வெளியிட்ட ஏழு விடயங்கள் தொடர்பில் பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர்.
சாட்சியங்களின் அடிப்படையிலன்றி வெறும் கருத்துக்கள் அறிக்கைகளின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்களை சுமத்தி நடவடிக்கை எடுக்கப்பட முடியாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
FIFA உலகக் கிண்ணம்... குழுச் சுற்றில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய ஆட்டங்கள் News Lankasri