ஒன்றரை வருடங்களுக்குப் பின்னர் தையிட்டி தொடர்பில் விசாரணை ஆரம்பம்
யாழ். தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குப் பொலிஸாரினால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் ஒன்றரை வருடங்களின் பின்னர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணையை ஆரம்பித்துள்ளது.
தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றக் கோரி 2023 ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் திகதி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்பட்டிருந்த ஜனநாயக ரீதியான போராட்டத்தின்போது பலாலி பொலிஸாரால் அராஜகமான அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டு சட்டவிரோத கைதுகள் இடம்பெற்றறிருந்தன.
பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு
இதனையடுத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய காரியாலயத்தில் 8 பேரினால் பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
ஆயினும், காரணம் எதுவுமின்றி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயத்தால் குறித்த முறைப்பாட்டு கோவைகள் யாழ். பிராந்திய காரியாலயத்தில் இருந்து கையேற்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாக மனித உரிமைகள் ஆணைக்குழுவால் விசாரணை எதுவும் நடைபெற்றிருக்கவில்லை.
மனித உரிமைகள் ஆணைக்குழு
இந்நிலையில், ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பு காரியாலயத்தில் இன்று விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒன்றரை வருடங்களாக விசாரணைகள் முன்னெடுக்கப்படாதிருந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடு குறித்து நாடாளுமன்ற வரவு - செலவுத் திட்ட விவாதத்தின் போது இலங்கையின் மனித உரிமைகள் குறித்த விடயதானத்தில் உரையாற்றும்போது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியிருந்த நிலையிலேயே இந்த விசாரணை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஹீத்ரோ தீ விபத்தின் பின்னணியில் விளாடிமிர் புடின்... ரஷ்ய சதி குறித்து எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri

Post Office -ன் 2 வருட சூப்பர் திட்டம்.., ரூ.2 லட்சம் முதலீட்டுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri
