எரிகாயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு (VIDEO)
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீலாமுனை பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து எரிகாயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சீலாமுனை, ஆனந்தன் வீதியிலிருந்து வீட்டில் தனிமையிலிருந்த தி.சத்தியராஜன் என்னும் 69வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மண்ணெண்ணை ஊற்றப்பட்டு தீயிட்டு குறித்த நபர் எரிந்துள்ளதாக ஆரம்பக்கப்பட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபருக்கு அருகில் கடிதம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனடிப்படையில் அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்பது தொடர்பிலும் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாவட்ட குற்றத்தடவியல் பிரிவு பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன் களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் பிரேதத்தை பார்வையிட்டதுடன், விசாரணைகளை முன்னெடுத்து, பிரேதத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று உடற்கூற்றுப் பரிசோதனைக்குட்படுத்தும் படி பொலிஸாரிடம் உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.







இனியா செய்த விஷயம்.. ஷாக் ஆன வில்லன்! நம்பர் 1 ட்ரெண்டிங்கில் பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ Cineulagam

குக் வித் கோமாளி சீசன் 6 ரசிகர்களுக்கு வந்த ஒரு தகவல்.. திடீரென நடந்துள்ள மாற்றம், என்ன தெரியுமா? Cineulagam
