கிளிநொச்சியில் சட்டவிரோத பொருட்களுடன் ஒருவர் கைது
கிளிநொச்சியில் விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினரும் இணைத்து மேற்கொண்ட சோதனையின் போது 5 கிலோக்கும் அதிக எடையுள்ள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (17.10.2023) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக மோட்டார் சைக்கிள் சோதனைக்குட்படுத்தப்பட்டது.
பொலிஸார் விசாரணை
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணேசபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளில் மறைத்து எடுத்து செல்லப்பட்ட கஞ்சாவுடன் பயன்பாடு அற்ற காணிக்குள் சந்தேக நபர் சென்றுள்ளார்.
குறித்த மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து சென்ற விசேட அதிரடிப்படையினரும், இராணுவத்தினரும் சோதனையிட்டனர். இதன்போது, மறைத்து வைக்கப்பட்ட கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டதுடன், சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரும், அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் கஞ்சா பொதிகளும் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
