லண்டனில் 12 வயது சிறுமி மாயம்! - பொது மக்களின் உதவியை கோரியுள்ள பொலிஸார்
லண்டனில் வசிக்கும் 12 வயது சிறுமி ஒருவர் காணாமல்போயுள்ளமை தொடர்பில் பொலிஸார் பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர்.
லண்டனில் உள்ள Slough என்ற பகுதியில் வசிக்கும் 12 வயது சிறுமியான லிலியனா ஹென்றி, நேற்று முன்தினம் காணாமல்போனார். தற்போது வரை அவர் எங்கிருக்கிறார்? என்ற தகவல் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இது குறித்து பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிறுமியின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. இச்சிறுமி நேற்று முன்தினம் மாலையில் Slough என்ற பகுதியில் காணாமல்போயுள்ளார். மேலும், சுட்டன் பகுதியில், அவர் அடிக்கடி தென்பட்டதாக கூறப்படுகிறது.
எனவே, அவரை யாராவது பார்த்திருந்தால், தங்களிடம் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் ஜேசன் லீல்ஸ் கருத்து வெளியிடுகையில்,
“லிலியனா கடைசியாக பிற்பகல் 3 மணியளவில் காணப்பட்டார். எனினும், அதன் பின்னர் அவரை காணவில்லை. உள்ளூர் பகுதியில் தேடல் நடந்து கொண்டிருக்கிறது, நாங்கள் இப்போது பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளோம்.
லிலியனா தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் 101 அல்லது 43210458578 என்ற இலக்கத்தினை தொடர்புகொண்டு தெரிவிக்க முடியும். நாங்கள் லிலியனாவின் நலனில் அக்கறை கொண்டுள்ளோம்,
எனவே அவரை கண்டால் எங்களுக்கு தகவல் வழங்குங்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜேர்மனியில் கோவிட் தடுப்பூசியால் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கானோர்: எலான் மஸ்கின் ஆதரவு செய்தி News Lankasri
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
பிக் பாஸ் திவாகரை கம்பியால் தாக்கினாரா மா கா பா? நடிகையிடம் வாட்டர் மெலன் ஸ்டார் சர்ச்சை பேச்சு Manithan
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri