பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுக்காக்கும் சட்டமும் வேண்டாம் பருத்தித்துறை நகசபையில் தீர்மானம்..
பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரியும் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட விருக்கின்ற பயங்கர வாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சடடத்தையும் கொண்டுவர வேண்டாம் என்றும் இன்று பருத்தித்துறை நகரசபையில் தீர்மானம் நிறைவேற்ப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகர சபை அமர்வு தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் நேற்று பிற்பகல் 2:30 மணியளவில் இரண்டு நிமிட அகவணக்கத்துடன் ஆரம்பமானது.
இதனம்போது தவிசாளர் விசன்ட் டீ போல் டக்ளஸ் போல் அவர்களால் கொண்டுவரப்பட்ட குறித்த தீர்மானம் 12 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதில் npp உறுப்பினர்கள் 2 பேரும் குருத்த தீர்மானத்திலிருந்து விலகியிருந்தனார். மொத்தம் 15 உறுப்பினர்களில் ஒரு உறுப்பினர் இன்றைய அமர்வில் கலந்துகொள்ளவில்லை.
இதேவேளை இன்றைய அமர்வில் முதலவதாக சென்ற கூட்ட அறிக்கை வாசிக்கப்ட்டு அதனை திருத்தங்களுடன் சபை அங்கீகரித்தது.
தொடர்ந்து குடத்தனை வலிக்கண்டி, பருத்தித்துறை முனை நடராசா அரங்கு உட்பட்ட பருத்தித்துறை நகர சபைக்கு சொந்தமான காணிகளை நில அளவீடு செய்து எல்லைப்படுத்துவது என்றும், சபை நடவடிக்கைக்கான நிதி அனுமதிகள், மலக் கழிவு உறிஞ்சுவதற்க்குரிய வாகனம் ஒன்றினை கொள்வனவு செய்வது என்றும், வாழைத்தண்டு உட்பட்ட கழிவுகளை துகளாக்கும் இயந்திர கொள்வனவு, உட்பட. பல்வேறு தீர்மாநாங்கள் இன்றையதினம் நிறைவேற்றப்பட்டுள்ளன
பாண்டி திருமண பிரச்சனையில் நிலா சோழனுடன் வாழ்வது குறித்து எடுத்த அதிரடி முடிவு... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
புதருக்குள் இழுத்துச் செல்லப்பட்டு... வெளிநாட்டில் டாக்ஸி சாரதியால் மீட்கப்பட்ட பிரித்தானிய மாணவி News Lankasri