யாழில் மதுபோதையில் இருந்த பொலிஸார் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்
பருத்தித்துறையில் இருந்து மணல்காட்டிற்கு சுற்றுலா சென்றவர்கள் மீது சிவில் உடையில் நின்ற பொலிஸார் கோரத் தாக்குதல் மேற்கோண்டுள்ளனர்.
சிவில் உடை மட்டுமன்றி மேல் ஆடைகளே இல்லாது மது அருந்தியவாறு இருந்த காங்கேசன்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரே இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
பொலிஸார் பொலிஸ் திணைக்கள வாகனத்தில் சென்று மேலாடைகள் இன்றி மதுபோதையில் இருந்துள்ளனர்.

பொலிஸார் மேற்கோண்ட தாக்குதலில் படுகாமடைந்த இருவர் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த தாக்குதல் மேற்கொண்டதான சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைகுழுவின் யாழ்ப்பாண அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் இதனை தெரிவித்துள்ளார்.
பொலிஸார் மேற்கோண்ட தாக்குதலில் காயமடைந்த மூவரிடமும் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அதிகாரிகள் மந்திகை வைத்தியசாலையில் வைத்து இன்றையதினம் வாக்குமூலங்களை பதிவுசெய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.




