மொட்டு கட்சியின் ஆதரவாளர்களுக்கும் பொலிஸ் தரப்புக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் நிலை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்களுக்கும் பொலிஸ் தரப்புக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தம்புத்தேகமவில் நடைபெற்ற கட்சி அமைப்பாளர் நியமன நிகழ்வின் போது, கட்சி கொடிகளை கட்டுவதற்கு தடை விதித்ததால் இந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமம் ராஜபக்ச கலந்துகொள்ளவிருந்தார்.
நிகழ்வு நடைபெறும் இடத்தைச் சுற்றி கொடிகளை நடுவதை பொலிஸார் தடுத்துள்ளதுடன் தம்புத்தேகம நிலையப் பொறுப்பதிகாரியின் நேரடி உத்தரவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சிக் கொடி
எனினும், கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம், தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில் இவ்வாறான தடைகளை விதிக்க சட்டத்தில் இடமில்லை என்று கூறியுள்ளார்.

அத்துடன், வர்த்தக நிறுவனங்களுக்கு கொடி கட்ட அனுமதி இருக்கும்போது, அரசியல் கட்சிக்கு மட்டும் ஏன் தடை? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேநேரம், அரசாஙகம் தங்களுக்கு அஞ்சி, கட்சியின் செயற்பாடுகளை சீர்குலைக்க முயற்சிப்பதாக காரியவசம் குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கிடையில், இது தொடர்பாக தம்புத்தேகம பொலிஸாரிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும், அது கிடைத்த பின்னரே மேலதிக கருத்துக்களை கூற முடியும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் F.U. வூட்லர் தெரிவித்துள்ளார்.