சுயாதீனமாக செயற்படும் எவருக்கும் எமது அனுமதியின்றி பதவிகளை வழங்கக்கூடாது : ஜனாதிபதிக்கு அறிவித்துள்ள மொட்டுக்கட்சி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகிய நிலையில், சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்துள்ள எவருக்கும் தமது கட்சியின் அனுமதியின்றி சர்வகட்சி அரசாங்கத்தில் பதவிகளோ, அங்கீகாரமோ வழங்கக்கூடாது என மொட்டுக்கட்சி, ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதை எதிர்க்கவில்லை
எனினும் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்துவதை தாம் எதிர்க்கவில்லை எனவும் பொதுஜன பெரமுன, ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுஜன பெரமுன ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக்கொண்டு தமது விருப்பத்திற்கு அமைய சுயாதீனமாக செயற்பட போவதாக அறிவித்தமை காரணமாக இந்த தீர்மானத்தை எடுத்ததாகவும் அந்த கட்சியின் உட்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தெரிவான விமல் வீரவங்ச,வாசுதேவ நாணயக்கார, அனுரபிரியதர்ஷன யாப்பா உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட போவதாக அறிவித்து, செயற்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மகிந்தவும் கோட்டாபயவும் பதவி விலகியமைக்கு புலனாய்வு சேவைகள் காரணமா.....