பிரதமரின் முஸ்லிம் விவகார இணைப்பாளர் தொடர்பில் வெளியான தகவல்
ஷிராஸ் யூனுஸ் (Shiraz Yunus) எனும் நபர் பிரதமரின் முஸ்லிம் விவகார இணைப்பாளராக செயற்படுவதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த செய்தியினை உண்மைக்கு புறம்பானவை என பிரதமரின் ஊடகப்பிரிவு வன்மையாக கண்டித்துள்ளது.
ஷிராஸ் யூனுஸ் எனும் குறித்த நபருக்கு பிரதமர் அலுவலகத்தில் எவ்வித பதவிகளும் வழங்கப்படவில்லை.
இவ்வாறான நிலையில் பிரதமருக்கு எதிராகவும், பொதுஜன பெரமுனவிற்கு எதிராகவும் குறித்த நபர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றமையை பிரதமர் ஊடகப்பிரிவு வன்மையாக கண்டித்துள்ளது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |