அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்த திட்டம்: சந்தேக நபர் விளக்கமறியலில்..!
அமெரிக்க தூதரகம் மற்றும் அதன் அதிகாரிகள்மீது அடிப்படைவாத பயங்கரவாதிகள் குழுவொன்று தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பிரசாரம் மேற்கொண்டதாகக் கூறப்படும் நபர் ஒருவர், எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்ட பத்தரமுல்லைச் சேர்ந்த குறித்த நபர் நேற்று (24) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
நடத்தப்பட்ட விசாரணை
சந்தேகநபர் சமூக ஊடகங்களில் தவறான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளமை இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், சந்தேகநபருக்கு மனநல பிரச்சினை உள்ளதா என்பதைக் கண்டறிய மனநல மருத்துவ அறிக்கையைக் கோருவதற்கான விசாரணை அதிகாரிகளின் கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 2 நாட்கள் முன்

2030வாக்கில்... பிரித்தானியர்களுக்கு கவலையை ஏற்படுத்தும் செய்தி ஒன்றை தெரிவித்துள்ள ஆய்வு News Lankasri
