மைத்திரி, கோட்டாவை படுகொலை செய்ய திட்டம்? - உடன் விசாரணைக்கு கோரிக்கை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கேபண்டார இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோரைக் கொலை செய்யத் திட்டம் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர அண்மையில் தெரிவித்திருந்தார்.
தயாசிறி ஜயசேகரவின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு அவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.
சதி இருப்பதாக கூறாமல் இவ்வாறானதொரு திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தால் ஏன் விசாரணை நடத்தப்பட்டிருக்காது எனவும் பாலித ரங்கேபண்டார கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தச் சதியில் சிக்கியுள்ளதாக கூறப்படும் இருவரில் ஒருவர் அப்போதைய நிறைவேற்று ஜனாதிபதியாகவும் மற்றையவர் தற்போதைய நிறைவேற்று ஜனாதிபதியாகவும் இருப்பதால் விசாரணைக்கு எந்தத் தடையும் இல்லை” அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, இவ்வாறான படுகொலை சதித்திட்டம் இருப்பதாக சில வருடங்களுக்கு முன்னர் நாமல் குமார கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
