மன்னாரில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை
மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்வியியல் கல்லூரி பயிலுனர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் தலைமையில் இன்று (20) காலை மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றுள்ளது.
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் மன்னார் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை ஆகியவை இணைந்து குறித்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தை நிரந்தர வதிவிடமாகவும், அதே நேரம் மன்னார் மாவட்ட கல்வி வலயங்களில் கல்வி கற்கின்ற பல்கலைக்கழக மாணவர்கள், கல்வியியல் கல்லூரி மாணவர்கள், உயர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு விசேடமாக பைஸர் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
