அரச களஞ்சியங்களில் வீணாக்கப்படும் நெல் தானிய கையிருப்பு
அரிசி விலை நாளுக்கு நாள் சந்தையில் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் அரச களஞ்சியங்களில் நெல்லை வீணாகிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
நெல் தானிய கையிருப்பு சேதம்
பொலன்னறுவை - மன்னம்பிட்டி நெல் களஞ்சியசாலையில் நீண்ட காலமாக களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல் தானிய கையிருப்பு, தற்போது காலம் கடந்துவிட்டதன் காரணமாக பாவனைக்கு உதவாத நிலையை எட்டியுள்ளது.
இவ்வாறு வீணாகிப் போகும் நெல் கையிருப்பு இலட்சக் கணக்கான ரூபாய் பெறுமதியைக் கொண்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
விவசாய அமைச்சர் உடனடி நடவடிக்கை
இந்நிலையில் இந்த நெல்லை அரிசியாக்கி சந்தையில் விற்பனைக்கு செய்வது தொடர்பில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கவனம் செலுத்தியுள்ளார்.
பாவனைக்கு உதவாத நெல்லை களஞ்சியசாலைகளில் இருந்து அகற்றி, எஞ்சிய நெல் கையிருப்பு விரைவில் அரிசியாக்கப்பட்டு சந்தைக்கு விடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.