கிளிநொச்சியில் திடீரென உயிரிழந்த பன்றிகள்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
கிளிநொச்சியில் தனியார் பன்றிப் பண்ணை ஒன்றில் நோய் தொற்று காரணமாக உயிரிழந்த பன்றியின் உடலை மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தி மன்றுக்கு அறிக்கை இடுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பன்றி வளர்ப்பு பண்ணையில் திடீரென தொடர்ச்சியாக 50இற்கும் மேற்பட்ட பன்றிகள் உயிரிழந்துள்ளன.
இந்நிலையில், குறித்த பண்ணையிலிருந்து ஒரு தொகுதி பன்றிகளை வேறு ஒரு பண்ணைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட சமயம், கால்நடை வைத்திய அதிகாரியினால் குறித்த பண்ணையாருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இரத்த மாதிரிகள்
குறித்த வழக்கானது, கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ். சிவ பாலசுப்பிரமணியம் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது உயிரிழந்த பன்றியின் மாதிரிகளை பெற்று மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்குமாறு மன்று கட்டளையிட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த பண்ணையில் உயிரிழந்த பன்றியின் மாதிரிகள் உயிருடனுள்ள ஏனைய பன்றிகளின் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு பேராதனையில் உள்ள மிருக வைத்திய ஆராய்ச்சி பிரிவுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக கால்நடை வைத்திய அதிகாரி இ. கனகரத்னம் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri