ஹட்டனில் திடீர் சோதனையில் மருந்தக உரிமையாளர் கைது!
நீண்டகாலமாக போதை மாத்திரைகளை பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹட்டன் நகரைச் சேர்ந்த ஒரு மருந்தக உரிமையாளர் ஒருவரே, இவ்வாறு ஹட்டன் பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் இன்று(24.03.2026) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருந்தக உரிமையாளர் கைது
குறித்த மருந்தக உரிமையாளர் இளைஞர்களைக் குறிவைத்து, மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் இந்த மருந்துகளை மிக அதிக விலைக்கு விற்பனை செய்வதாக ஹட்டன் பிரதேச சிரேஷ்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகரவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஹட்டன் பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, விற்பனைக்கு வைத்திருக்கும் போதை மாத்திரைகள் வர்த்தக நிலையத்தில் வைத்திருக்கும் இடத்தினை கண்டறிந்து கொண்டு வர்த்தக நிலைய உரிமையாளரிடம் மேற்கொண்டுட விசாரணையின் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவரிடம் இருந்து விற்பனைக்கு வைத்திருந்த 1400 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சந்தேகநபரை ஹட்டன் நீதிமன்றில் முற்படுத்த ஹட்டன் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


ஆலிவர் பின்னால் இருக்கும் அந்த நபர் இவர்தானா, அடுத்த வில்லன் ரெடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri