கல்முனையில் 9 இலட்சம் பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது
அம்பாறை (Ampara) - கல்முனையில் 9 இலட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் கொழும்பு புறநகர் பகுதியை சேர்ந்த நபரொருவர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது, நேற்று (21.06.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், அம்பாறை - கல்முனை மாநகர பகுதியில் உள்ள பிரபல உல்லாச விடுதிக்கு அருகில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இதன்போது, கைது செய்யப்பட்டவரிடம் இருந்து சுமார் 9 இலட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில், கொழும்பு புறநகர் பகுதியை சேர்ந்த 47 வயதுடைய குறித்த நபரிடம் 25,150 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் காணப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட நபர் சான்று பொருட்களுடன் கல்முனை தலைமையக பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
