துறைமுக நகரில் டிஜிட்டல் பணத்தை பயன்படுத்த அனுமதி
டிஜிட்டல் பணம் எனப்படும் கிறிப்டோ கரன்சியை (crptocurrency) கொழும்பு துறைமுக நகருக்குள் பயன்படுத்த அனுமதி வழங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகரின் விசேட பொருளாதார பிராந்திய நிர்வாக ஆணைக்குழுவின் தலைவர் சாலிய விக்ரமசூரிய இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
துறைமுக நகர சூழலில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் களியாட்டு சம்பந்தமான செயற்பாடுகளில் இந்த கிறிப்டோ கரன்சியை உள்ளடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், அமெரிக்க டொலர் உட்பட வெளிநாட்டு நாணயங்களும், டிஜிட்டல் நாணயமும் துறைமுக நகரில் பயன்படுத்த அனுமதிக்கப்படும் எனவும் சாலிய விக்ரமசூரிய குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே கிறிப்டோ கரன்சியை இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்கு தேவையான பரிந்துரைகளை முன்வைக்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதுடன் அதற்காக விசேட குழுவையும் நியமித்துள்ளது.

ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan