இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களுக்கான அனுமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு
இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் தேசிய திட்டமிடல்துறைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இந்த துறை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் இயங்கி வரும் நிலையில் இவ்வாறு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி 500 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான செயற்றிட்டங்கள் இலங்கை அரசாங்கத்தினால் நிதியளிக்கப்பட்டவையாக இருந்தால் அல்லது 1 பில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு நிதியுதவி என்றால் அவை அமைச்சரவைக்கு செல்லும் முன்னர் தேசிய திட்டமிடல் துறை அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள், திணைக்களத்தின் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள், சட்ட சபைகள் மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களுக்கு இது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! Manithan