மக்கள் மீண்டும் வீதிக்கு இறங்குவார்கள்: அநுரகுமார எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு
அடுத்த வருடம் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் இல்லையேல் மக்கள் மீண்டும் வீதிக்கு இறங்குவார்கள் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல்களை அரசாங்கம் ஒத்திவைத்துள்ளது.
எனினும் மக்களின் நிறைவேற்று அதிகாரத்தை மக்களால் நியமிக்கப்படும் ஜனாதிபதியே பயன்படுத்த வேண்டும் என அரசியலமைப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபையின் நிர்வாகத்தை ஆணையாளரின் கீழும் மாகாண சபைகளை ஆளுநர் நிர்வாகத்தின் கீழும் கொண்டு வர முடியும். எனினும் மக்களின் நிறைவேற்று அதிகாரத்தை மக்களால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதியே அதனை மேற்கொள்ள முடியும்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,



