தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக வருவது முடியாத காரியம் : இராஜாங்க அமைச்சர் சாமர பகிரங்கம்
தமிழர் ஒருவரை ஜனாதிபதியாக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர், அது முடியாத காரியம் என ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
மாந்தை உப்பு உற்பத்தி நிறுவன பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு வருடாந்த ஊக்குவிப்புத் தொகை வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை (27) மாலை மன்னார் உப்பு உற்பத்தி நிலையத்தில் இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில், தமிழர் ஒருவரை ஜனாதிபதியாக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். அது முடியாத காரியம்.
தமிழர் ஒருவர் எவ்வாறு ஜனாதிபதியாக வர முடியும்? ஜனாதிபதியாக தெரிவு செய்ய எத்தனை வாக்குகள் தேவை? தமிழர்களின் வாக்குகள் எத்தனை உள்ளது.
அதிகமானவர்கள் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையே தெரிவு செய்வார்கள்.
கடந்த காலங்களில் மக்கள் எதிர் நோக்கிய பிரச்சனை மக்களுக்கு நன்றாக
தெரியும். எனவே மக்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவார்கள் என
தெரிவித்துள்ளார்.
மன்னார் உப்பு உற்பத்தி
மன்னார் உப்பு உற்பத்தி நிலையத்தின் முகாமையாளர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் உப்பு உற்பத்தி நிறுவன அதிகாரிகள் பணிப்பாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது குறித்த உப்பு உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிகின்ற பணியாளர்கள்
தொழிலாளர்கள் என 150 பேருக்கு வருடாந்த ஊக்குவிப்புத் தொகை கொடுப்பனவுகள்
காசோலைகளாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




குணசேகரன் மற்றும் அவரது அம்மா திட்டத்தை தெரிந்துகொண்ட ஜனனி.. எதிர்நீச்சல் சீரியல் அடுத்த அதிரடி புரொமோ Cineulagam

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri

viral video: கலிபோர்னியாவை உலுக்கிய நிலநடுக்கம்... குட்டிகளை காப்பாற்ற யானைகள் செய்த நெகிழ்ச்சி செயல் Manithan

மைனா படத்தில் போலீஸ் ரோலில் நடித்த இந்த நடிகரை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
