விடுதலைப் புலிகளின் தலைவரால் உருவாக்கப்பட்ட கட்சி என்பதால் மக்கள் வாக்களித்தனர்..!
விடுதலைப் புலிகளின் தலைவர் தமிழ் மக்களை பாதுகாக்க ஒரு அரசியல் சக்தி உருவாக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கினார்.
அவரால் உருவாக்கப்பட்ட கட்சி என்றதால் வாக்களிக்க வேண்டும் என்று மக்கள் வாக்களித்தனர். புலம் பெயர்ந்த மக்கள் அனுப்பிய பல கோடி ரூபா பணம் மக்களிடம் சென்று சேரவில்லை எனவே இனி யாரும் தப்ப முடியாது என ஈரோஸ் கட்சியின் தலைவர் இரா. பிரபாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை
மலையக மக்களின் பணத்தை எவ்வாறு அந்த அரசியல்வாதிகள் சூறையாடினார்கள் அதே மாதிரி வட கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட விதவைகள், அங்கவீனர்கள், சிறுவர்கள், முதியவர்கள் உட்பட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக வடகிழக்கை புனரமைப்பதற்காக யுத்தம் முடிவுற்ற தன்; பின்னர் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சுமந்திரன் சாணக்கியன் வரைக்கு எவ்வளவு பணம் அனுப்பப்பட்டது அது மக்களுக்கு சேரவில்லை.

தொண்டமானுக்கு அடுத்த கூட்டம் இது சுவிஸ், லண்டன், கனடாவில் யாருக்கு எத்தனை கோடி பணம் கொடுத்தது என்ற ஆதாரம் இருக்கிறது எனவே இனி யாரும் தப்ப முடியாது.
உங்களுக்கு மனித உரிமை ஆணைக்குழு மற்றும் நீதிமன்றம் செல்வோம். உங்கள் வண்டவாளம் வெளிவரும் ஐந்து பேர் தமிழ் தேசிய கூட்டமைப்பு என இருந்து கொண்டு இன்று பிரிந்தவுடன் தப்பித்தோம் என்று நினைக்க வேண்டாம்.
அதேமாதிரி செந்தில் தொண்டமான் கிழக்கு ஆளுநராக இருந்த போது மாகாணத்தில் உள்ள எல்லா பிரதேச சபைகளில் இருந்த அப்பாவி மக்கள் வரிப்பணத்தை எடுத்து சமாதான புறா விட்டதும் காளை மாடுகளை இறக்கி நிகழ்வு செய்ததுதான் அவரின் வேலை மட்டக்களப்பு மாவட்டத்தில் மாங்கேணி, கதிரவெளி, காயங்கேணி வாகரையில் உள்ள அரச காணிகளை கம்பனிகளுக்கு கொடுத்து அதற்கு பல இலட்சம் தரகு பணம் வாங்கி கொண்டது மட்டுமல்ல இல்மனைட் அகழ்விற்கு கம்பனிகளை கொண்டுவந்து
அதற்கு தரகு பணமாக பல கோடி ரூபா பணத்தை வாங்கி கொண்டதுடன் அரசாங்க பணத்தில் ஒரு வருடத்தில் 3 இலட்சம் ரூபாவுக்கு 500 கிலோ கயூ வாங்கி சாப்பிட்டுள்ள அவர் கோடி கணக்கில் சுருட்டிக் கொண்டு சென்று தப்பித்தேன் என்று நினைக்க வேண்டாம்.
தமிழ் பேசும் மக்களுக்கு
விடுதலைப் புலிகளின் தலைவர் இந்த மண்ணுக்காக மக்களுக்காக தனது குடும்பத்தையே தாரை வாரத்;துக் கொடுத்த ஒரு தீர்க்கதரிசனம் கொண்ட தியாகி அவர் ஆயுத போராட்டம் மெனளிக்கப் போகிறது எனவே தமிழ் மக்களை பாதுகாக்க ஒரு அரசியல் சக்தி உருவாக்க வேண்டும் என ஒட்டுக்குழுக்கள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து சம்பந்தன் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கி 22 பேரை நாடாளுமன்றம் அனுப்பினார்.

யுத்தம் முடிவுற்ற பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு 11 நாடாளுமன்ற உறுப்பினர்களாக குறைந்தது எனவே புலிகள் இல்லை என்றால் உங்களுக்கு வாக்கு இல்லை அந்த தலைவரால் உருவாக்கப்பட்ட கட்சி என்றதால் வாக்களிக்க வேண்டும் என்று மக்கள் வாக்களித்தனர்.
எனவே இனி அந்த பருப்பு வேகாது ஈரோஸ் கட்சியை மக்கள் நம்புகின்றனர் நான் தலைவர் அல்ல தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு நல்ல தலைமைத்துவத்தை உருவாக்க ஈரோஸ் ஒரு பாலமாக ஏணிப்படியாக செயல்படும் என்றார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri