யாழில் வீதியில் இறங்கி மக்கள் போராட்டம்!! குவிக்கப்பட்ட பொலிஸார்: ஏற்பட்ட பரபரப்பு

Protest Jaffna People
By Kanamirtha Dec 07, 2021 07:47 AM GMT
Kanamirtha

Kanamirtha

in சமூகம்
Report

யாழ்ப்பாணம் - வைத்தியசாலை வீதியிலுள்ள கொட்டடி பகுதியில் அமைந்துள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியசாலையை அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு மக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

குறித்த பகுதி பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று காலை 9 மணிக்கு இந்தப் போராட்டம் இடம்பெற்றது.

இதன் போது எமது உயிருக்கு யார் உத்தரவாதம், நாம் ஆரோக்கியமான சந்ததியாய் வாழ வழிவிடு,தரமற்ற எரிவாயுக் கசிவால் ஏற்படும் ஆபத்துக்கு யார் பொறுப்பு என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

ஜே / 81 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த மக்கள் ஸ்ரீ மீனாட்சி சனசமூக நிலையம் ஊடாக குறித்த களஞ்சிய சாலை மூலம் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு உள்ளதாகவும், களஞ்சிய சாலைக்கு முன்பாக கனரக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதனால், போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாகவும், குறிப்பாக அருகில் உள்ள பாடசாலைக்கு நடந்து செல்லும் மாணவர்கள் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டு, உடனடியாக அங்கிருந்து குறித்த களஞ்சியசாலையை அகற்றுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.


யாழ்ப்பாண பிரதேச செயலர், யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர், நகர அபிவிருத்தி அதிகார சபை பிரதிப்பணிப்பாளர் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை பிரதிப்பணிப்பாளர் உள்ளிட்டோருக்கு இந்த ஆண்டு ஆரம்பத்தில் கடிதம் மூலம் குறித்த கோரிக்கையை விடுத்து இருந்தனர்.

அதேவேளை அப்பகுதி மக்களின் முறைப்பாட்டை அடுத்து நகர அபிவிருத்தி அதிகார சபை, எரிவாயு களஞ்சியத்தின் பாதுகாப்பு ஒழுங்குகள் அயலவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் மேற்கொள்ள வேண்டும், ஆதனத்திற்குள் வாகனங்கள் தரித்து நிற்பதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட வேண்டும், அத்துடன் கட்டடத்திற்கான அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதி பெறப்பட்டிருந்தால் அதனைச் சமர்ப்பிக்க வேண்டும் என குறித்த களஞ்சியசாலை உரிமையாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இந்த நிலையில், குறித்த களஞ்சிய சாலை உரிமையாளர், கடந்த ஆகஸ்ட் மாதமளவில், அயல் மக்களுக்கு இடையூறு செய்வதைக் கருத்தில் கொண்டு, மனிதாபிமான ரீதியிலும் இங்கு நடைபெறுகின்ற 50 வீதமான வாகன செயற்பாடுகளை வேறு இடத்திற்கு மாற்றத் தீர்மானித்து உள்ளதாகவும், கோவிட்- 19 நிலைமை காரணமாக 4 – 6 மாத கால அவகாசம் தேவைப்படும் எனவும் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வருக்குக் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

அந்த நிலையிலேயே அப்பகுதி மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US