வீதிகளில் சிறைவைக்கப்படும் மக்கள்! செய்திகளின் தொகுப்பு
கொழும்பைச் சூழவுள்ள புறநகர்ப் பகுதிகளில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தினர் ஒவ்வொரு மாதமும் பெரும்பாலான நேரத்தை சாலைகளிலேயே செலவிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பகுதிகளில் உள்ள நடுத்தர வர்க்கத்தினர் எதிர்கொள்ளும் மோசமான பயணச் சூழலை அட்வகேட்டா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தனநாத் பெர்னாண்டோ வெளிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, கடவத்தை, கடுவெல, மாலம்பே, மஹரகம மற்றும் கல்கிஸ்ஸ பகுதிகளில் வசிப்பவர்கள் நாள் ஒன்றுக்கு குறைந்தது மூன்று மணிநேரம் நகரத்திற்குச் செல்வதற்கும் நகரை விட்டு வெளியேறுவதற்கும் வாகனங்களில் நேரத்தை செலவிடுகின்றனர்.
ஒரு வருடத்தின் முழு மாதத்தையும் போக்குவரத்தில் செலவிடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளையும் மேலும் பல செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு



