அறப்போர் புரிந்த அன்னை பூபதியின் நினைவு தினம் அனுஷ்டிப்பு (Photos)
தமிழ்த் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அறப்போர் புரிந்த அன்னை பூபதி அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவு வணக்க நாள் நிகழ்வுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அலுவலகமான அறிவகத்தில் நடைபெற்றுள்ளது.
இந் நினைவு வணக்க நினழ்வ இன்று (18) இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நினைவுச் சுடரினையும் ஏற்றி அன்னை பூபதியின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலையினையும் அணிவித்தார்.
“இந்தியப் படை உடனடியாகப் போர் நிறுத்தத்தை மேற்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுக்களின் ஈடுபட வேண்டும்” என்று கோரி மட்டக்களப்பு அன்னையர் முன்னணியின் சார்பில் அன்னைபூபதி அவர்கள் அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
1988ம் ஆண்டு மார்ச் மாதம் பத்தொன்பதாம் திகதி காலை 10-45மணிக்கு மட்டக்களப்பு அமிர்தகழி சிறி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் முன்றலில் உள்ள குருந்த மரநிழலின் கீழ்அன்னை பூபதி தனது சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
1988ம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் திகதி சனிக்கிழமை காலை 10-45 மணிக்குத் தனது சாகும் வரையிலான உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்த அன்னை பூபதி அவர்களின் இறுதி மூச்சு காற்றோடு ஏப்பிரல் மாதம் 19ம் திகதி காலை 8-45 மணியளவில் கலந்து பரவியது என்பது நினைவு கூரத்தக்கது.


விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri